1.மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.07.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அலுவலக வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 2. இம்முகாமில் Reliance Jio infocomm Ltd என்ற தனியார்துறை முன்னணி நிறுவனம் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் ஐ.டி.ஐ , டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 3. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Candidate Login – ல் பதிவு செய்ய வேண்டும் 4. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் Reliance Jio infocomm Ltd என்ற தனியார்துறை நிறுவனம் www.tnprivatejobs.tn.gov.in என்ற வலைதளத்தில் Employer Login – ல் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது decgcmdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /var/www/5b88c36c-15f6-4d65-a635-c88b671bd575/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply